You are here
Home > Uncategorized > நரசிம்மராவுக்கு பா.ஜ.க பாராட்டு!

நரசிம்மராவுக்கு பா.ஜ.க பாராட்டு!

புதுடெல்லி:முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் பதவி விகித்த காலத்தில்தான் நாட்டில் பொருளாதாரச் சீர்திருத்தம் ஏற்பட்டது என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி பாராட்டியுள்ளார்.

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விரைந்து விசாரிக்கவில்லை என்று சோனியா காந்தி கருதிய காரணத்தால், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் அதை தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதினார்’ என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் அண்மையில் தெரிவித்த குற்றச்சாட்டையடுத்து பாஜக இவ்வாறு கூறியுள்ளது.

“மோடிநாமிக்ஸ்’ என்ற புத்தகத்தை அருண் ஜெட்லி டெல்லியில் சனிக்கிழமை வெளியிட்டார். விழாவில் பேசிய அவர், “1970 மற்றும் 1980களில் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பின்னர் 1991ஆம் ஆண்டில் முதல் அமைந்த நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் சீர்திருத்தம் ஏற்பட்டது.

திருப்பு முனையாகவும் அமைந்தது. இதன்காரணமாக அடுத்ததாக பிரதமர் பதவி ஏற்ற வாஜ்பாய் பொருளாதாரச் சீர்திருத்தங்களை எளிதாக முன்னெடுத்துச் சென்றார்’ என்றார் ஜெட்லி .

1992-ஆம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதுதான் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமும், இந்தியாவின் வரலாற்றுச் சின்னமுமான பாபரி மஸ்ஜிதை சங்க்பரிவார பாசிஸ்டுகள் இடித்து தள்ளினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Top