You are here
Home > Uncategorized > தோல்வி துரதிர்ஷ்டவசமானது: தோனி கவலை!

தோல்வி துரதிர்ஷ்டவசமானது: தோனி கவலை!

வெல்லிங்டன்: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணியின் அணித் தலைவர் தோனி கூறுகையில், பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் இப்படி ஒரு சிறப்பான பந்துவீச்சை நான் இதற்கு முன்பு பார்த்து இல்லை. விக்கெட்டுக்கு நேராக நேர்த்தியுடன் பந்து வீசினார்கள். தொடர்ந்து இது மாதிரி அவர்கள் பந்து வீசியது அவசியமாகிறது. முதல் இன்னிங்சில் எங்களது பந்துவீச்சு நன்றாக அமையவில்லை. மோசமானதாக இருந்தது.

2–வது இன்னிங்சில் எங்களது வீரர்களின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. சில அவுட்டுகள் துரதிர்ஷ்டவசமானது. ரகானேக்கு கொடுக்கப்பட்ட எல்.பி.டபிள்யூ முடிவு துரதிர்ஷ்டவசமானது. முக்கியமான கட்டத்தில் இந்த அவுட் கொடுக்கப்பட்டது கடினமான ஒன்றாகும்.”

இவ்வாறு தோனி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Top