You are here
Home > Uncategorized > தோல்வியில் முடிந்த சிரியா அமைதிப் பேச்சு வார்த்தை!

தோல்வியில் முடிந்த சிரியா அமைதிப் பேச்சு வார்த்தை!

ஜெனீவா:சிரியாவுடன் ஐ.நா.சபை நடத்திய 2வது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக சிரியாவுக்கான ஐ.நா. தூதர் லக்தர் பிராஹிமி சனிக்கிழமை ஜெனீவாவில் தெரிவித்தார்.

சிரியாவில் கடந்த 3 ஆண்டுகளாக அரசுக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 1,36,000 பேர் வரைகொல்லப்பட்டுள்ளனர். இதனால் இப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான 2வதுகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நடைபெற்றது.இப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும், அடுத்தகட்டபேச்சுவார்த்தைக்கான தேதி எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றும் லக்தர் பிராஹிமி கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, “”சிரியாவில் உள்ள அனைத்து தரப்பினரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்தப் போர் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதை உணர வேண்டும். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

சிரியா எதிர்க்கட்சியின் செய்தித் தொடர்பாளர் லூயேசபி கூறும்போது,
“”சிரியா விவகாரத்துக்கு அரசியல் ரீதியாக தீர்வு எட்டப்பட வேண்டும்.
இல்லாவிட்டால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் வீணானது” என்றார்.

Leave a Reply

Top