You are here
Home > Uncategorized > தோனியின் புதிய சாதனை!

தோனியின் புதிய சாதனை!

வெலிங்டன்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சிறப்பை இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி பெற்றுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐந்தாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 28 ஓட்டங்களை கடந்த போது, அவர் இந்த மைல் கல்லை எட்டினார்.

இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 8000 ஓட்டங்களை கடந்த 6ஆவது வீரர் என்ற பெருமையையும் அவர் அடைந்தார்.

இதுவரை 243 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மஹேந்திர சிங் தோனி, 9 சதங்கள், 54 அரைச் சதங்கள் அடங்கலாக 8046 ஓட்டங்களை குவித்துள்ளார்.

போட்டியொன்றில் அதிகபட்சமாக 183 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ள அவர் 53.28 எனும் சரசரியை கொண்டுள்ளார்.

Leave a Reply

Top