You are here
Home > Uncategorized > தொலைக்காட்சியை 2 மணிநேரத்திற்கு அதிகமாக பார்க்காதீர்கள்

தொலைக்காட்சியை 2 மணிநேரத்திற்கு அதிகமாக பார்க்காதீர்கள்

பாஸ்டன்:சீரியலை கட்டி அழும் தாய்மார்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி. 2 மணிநேரத்திற்கு அதிகமாக தொலைக்காட்சியை பார்த்தால் சர்க்கரைவியாதி, இதய அடைப்பு நோய் ஏற்படும் என ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தொலைக்காட்சியை பார்க்கும் 1,75,000 பேரிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஒரு நாளில் 2 மணி நேரத்துக்கு அதிகமாக டிவி பார்த்தால் சர்க்கரை வியாதி வரும் என்றும், 3 மணி நேரத்துக்கு அதிகமாக டிவி பார்த்தால் இதய அடைப்பு ஏற்படும் என்றும், அதிக நேரம் டிவி பார்த்தால் இளம் வயதிலேயே மரணம் சம்பவிக்கும் என்றும் அமெரிக்காவிலுள்ள “ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்’ என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்  பேராசிரியர்கள் பிராங்க் ஹு மற்றும் கிராண்ட்வெட் ஆகியோர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சிகளின் நோக்கம் உடலுழைப்பை அதிகப்படுத்தச் சொல்வது மட்டுமில்லாமல், டிவி பார்ப்பது போன்ற சோம்பேறித்தனமான செயல்களில் அதிக நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்வது தான் என்று பிராங்க் தெரிவித்தார்.

அதிகம் டிவி பார்ப்பதால் சர்க்கரை வியாதியோடு உடல் பருமனும் ஏற்படும் என்று கிராண்ட்வெட் தெரிவித்தார். 1970-லிருந்து 2011 வரை டிவி பார்ப்பது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டே இவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

அனைத்திலும் முன்னிலை வகிக்கும் அமெரிக்கர்கள் டிவி பார்ப்பதிலும் முன்னிலை தான். ஒரு நாளில் அமெரிக்கர்கள் 5 மணி நேரம் டிவி பார்ப்பதாகவும், ஐரோப்பியர்கள் 3-லிருந்து 4 மணி நேரம் டிவி பார்ப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அதிக நேரம் இணையதளத்தில் ப்ரவுஸ் செய்பவர்கள், கம்ப்யூட்டர் கேம்களில் அதிக நேரத்தை செலவிடுபவர்கள் ஆகியோருக்கும் இதேபோல நோய் தாக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Top