You are here
Home > Uncategorized > “தொடர்ந்து முஸ்லிம் விரோதப்போக்குடன் செயல்பட்டு வரும் காரைக்கால் SP வெங்கடசாமி மீது புதுவை அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்!”: பாப்புலர் ஃப்ரண்ட்

“தொடர்ந்து முஸ்லிம் விரோதப்போக்குடன் செயல்பட்டு வரும் காரைக்கால் SP வெங்கடசாமி மீது புதுவை அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்!”: பாப்புலர் ஃப்ரண்ட்

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் A.S. இஸ்மாயில் விடுத்துள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:

சுதந்திர உணர்வையும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நினைவு கூரும் விதமாகவும், தேசத்திற்கான நமது கடமையை உணர்த்தும் விதமாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தன்று “வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து  “ஃப்ரீடம் மீட்” என்ற பெயரில்  தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால் தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்குடன் செயல்பட்டு வரும் தமிழக காவல்துறை மேற்கண்ட சுதந்திர தினப் பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது. தமிழக காவல்துறையின் இந்த ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் கடந்த 16.08.2013ல் நடைபெற்றன.

புதுவை மாநிலம்  காரைக்காலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை,  தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்குடன் செயல்பட்டு வரும் காரைக்கால் SP வெங்கடசாமி தலைமையிலான காவலர்கள் அடித்து இழுத்துச் சென்றதோடு, 28 முஸ்லிம்கள் மீது பொய் வழக்கும் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேற்கண்ட அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த காரைக்கால் SP வெங்கடசாமி மற்றும் உடனிருந்த காவல்துறையினரைக் கண்டித்தும், பொய் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கடந்த 21.08.2013 அன்று காரைக்காலில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச் செயலாளர் ஏ. ஹாலித் முஹமம்து தலைமையில் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஜனநாயக உரிமையை நசுக்கும் விதமாக மேற்கண்ட SP வெங்கடசாமி தலைமையிலான காவல்துறை பெண்கள், குழந்தைகள் என்று கூட பார்க்காமல் அனைவரையும் லத்தி சார்ஜ் மூலம் விரட்டியடித்ததோடு கைதும் செய்துள்ளது. பின்னர் முஸ்லிம்கள் மீது பழி போடும் எண்ணத்தில் அரசுப் பேருந்துகளை காவல்துறையே அடித்து  நொறுக்கியது.

காரைக்கால் காவல்துறையின் இத்தகு ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டிப்பதோடு உடனடியாக தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்குடன் செயல்பட்டு வரும் SP வெங்கடசாமி மீது சட்டரீதியான  மற்றும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கும்படியும்,  கைது செய்த பொதுமக்களை உடனடியாக விடுதலை செய்யும் படியும் புதுவை அரசை  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியா சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் A.S. இஸ்மாயில் தனது பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Top