You are here
Home > Uncategorized > இந்தியா > தேர்வின்போது ஹிஜாப் அணிய கூடாது! – தொடரும் NET தேர்வின் சர்ச்சை!

தேர்வின்போது ஹிஜாப் அணிய கூடாது! – தொடரும் NET தேர்வின் சர்ச்சை!

டெல்லி ஜாமியா இஸ்லாமிய பல்கலைகழகத்தில் MBA படித்து வரும் மாணவி உமையா கான் கடந்த வாரம் டெல்லியின் ரோகினி பகுதியில் உள்ள தேர்வு மைய்யத்திற்கு தனது NET தேர்விற்காக சென்றபோது NET தேர்வை நடத்தும் அதிகாரிகள் உமையா கானை தேர்வு எழுதும் இடத்திற்கு அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய உமையா “தான் NET தேர்வு எழுத தேர்வு வளாகத்திற்கு சென்றபோது அங்கிருந்த அதிகாரிகள் தான் அணிந்திருந்த ஹிஜாப்பை கழற்ற சொன்னதாக கூறுகிறார்”.

அதற்கு உமையா ஹிஜாப் தனது மதம் சார்ந்த விடயம். ஆகையால் தான் ஹிஜாபை கழற்ற முடியாது என்று உயர் அதிகாரிகளிடம் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். மேலும் தன்னுடைய அனைத்து ஆவணங்களையும் சமர்பித்தும் அதிகாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்று அதிகாரிகள் மீது உமையா குற்றம்சாட்டுகிறார்.

இதுபற்றி கருத்து கூறிய உமையாவின் சகோதரர் முஹம்மது ஷஹித் தேர்வு எழுதும்போது ஹிஜாபை கழற்ற அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பது இது முதல் முறையல்ல. இதுபோன்று பல இஸ்லாமிய பெண்கள் இந்த நெருக்கடியை சந்தித்துள்ளனர். கல்வியில் மிகவும் பின்தங்கிய முஸ்லிம் தரப்பில் இருந்து உயர்கல்வி படிக்க முயலும் பெண்கள் இதுபோன்ற நெருக்கடிகளை சந்திப்பது கண்டிக்கத்தக்கது. இது வெறும் டெல்லியில் மட்டும் நடந்த நிகழ்வல்ல, கோவா மற்றும் இதர மாநிலங்களிலும் நடந்துள்ளது என்றார்.

தேர்வு எழுத வருபவர்கள் இப்படி தான் வரவேண்டும் என்று தேர்வு குழு சில வரைமுறைகளை வைத்திருப்பதால் பல மாணவ மாணவிகள் சிரமத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஒரு சில தினங்களுக்கு முன்பு கோவாவில் இதேபோன்ற நிகழ்வு நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

தேர்வின்போது ஹிஜாப் அணிய தடை இருப்பதை குறித்து UGC ஆணையகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் உமையா. உரிய பதில் கிடைக்கவில்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உமையா கூறியுள்ளார்.

Leave a Reply

Top