You are here
Home > Uncategorized > இந்தியா > தூய்மை இந்தியா திட்ட வரி ரத்தான​ பின்னும் வரிவசூலை தொடர்ந்த​ அரசு!

தூய்மை இந்தியா திட்ட வரி ரத்தான​ பின்னும் வரிவசூலை தொடர்ந்த​ அரசு!

“The wire” எனும் இணையதள செய்தி நிறுவனம் தகவல் உரிமை சட்டம் (RTI Act) மூலம் pஏற்ற தகவலின்படி “தூய்மை இந்தியா” திட்ட வரி ரத்தான​ பின்னும், மத்திய அரசு பலரிடம் வரி வசூல் செய்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது.

மத்திய அரசு GST அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிற வரிகளை படிப்படியாக குறைத்து வந்தது. அதன் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்திற்கான வரியை ஜூலை 1, 2018 அன்று முதல் முழுமையாக ரத்து செய்தது. ஆனால் அதன் பின்னும் பலரிடம் இவ்வரி வசூல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து பொருட்கள் மீதும் 0.5 சதவீதம் விதிக்கப்படும் இவ்வரி 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, கழிவறை கட்டுதல், திட திரவ கழிவு, வேளாண்மை கல்வி போன்றவற்றிற்காக பயன்படுத்தப்போவதாக கூறப்பட்டது.

வசூலிக்கப்பட்ட தொகைகள் :
2015-2016 – Rs 3,901.83 crore
2016-17 – Rs 12,306.76 crore
2017-18 – Rs 4,242.07 crore
2018-19 (as of September 30) – Rs 149.40 crore

மேலும் இவ்வரி பணத்தை எதற்காக செலவழித்தனர் என்பதையும், பணம் செலவழித்த திட்டங்கள் அல்லது முயற்சிகளையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை.

மொத்தமாக வசூலிக்கப்பட்ட 20,600 கோடி ரூபாயில் 16,300 கோடி மட்டுமே சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி 4,300 கோடி எங்கே சென்றது என்று தெரியவில்லை.

Leave a Reply

Top