You are here
Home > Uncategorized > துப்பாக்கி முனையில் மாணவனின் வெறிச்செயல் – ரஷ்யாவில் அரங்கேறிய கொடூரம்!

துப்பாக்கி முனையில் மாணவனின் வெறிச்செயல் – ரஷ்யாவில் அரங்கேறிய கொடூரம்!

ஒஸ்ஸெடியா: ரஷ்யாவில் பள்ளிக்கு வந்த மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் கடந்த 2004ம் ஆண்டு வடக்கு ஒஸ்ஸெடியா என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் ஆயுதமேந்திய பாதுகாவலர்களை நியமிக்க அந்நாட்டு அரசு சட்டம் இயற்றியது.

இந்நிலையில் இன்று காலை தலைநகர் மாஸ்கோவின் வடகிழக்குப் பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றில், காவலாளியை மிரட்டி துப்பாக்கியுடன் உயர்நிலைப் பள்ளி மாணவன் ஒருவன் நுழைந்திருக்கிறான்.

இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உள்ளே வந்த மாணவன் 20 மாணவர்களை பிணைக் கைதிகளாக்கிக் கொண்டான். அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் உயிரியல் பாட ஆசிரியரை நோக்கி கண்மூடித்தனமான சுட்டுள்ளான்.

இதில் ஒரு போலீஸ் அதிகாரியும், ஆசிரியரும் உயிரிழந்து விட்டனர். மற்றொரு போலீஸ் அதிகாரி படுகாயத்துடன் உயிர் தப்பினார். இதனையடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் மாணவர்களை மீட்டனர். மேலும் விசாரணைகளையும் துரிதப்படுத்தி உள்ளனர்.

Leave a Reply

Top