You are here
Home > Uncategorized > இந்தியா > திப்பு ஜெயந்தி விழாவை அரசு நடத்த கூடாது!- பாஜக அராஜகம்

திப்பு ஜெயந்தி விழாவை அரசு நடத்த கூடாது!- பாஜக அராஜகம்

இன்று (சனிக்கிழமை) கர்நாடக மாநிலத்தின் உள்ள மடிகெரியில் 18ம் நுற்றாண்டின் மைசூர் ராஜஜியத்தின்  அரசர் திப்பு சுல்தானின் பிறந்தநாள் நிகழ்ச்சி அரசு ஆதரவுடன் தொடங்கப்பட்டது. இதற்கு எதிராக மதவாத சக்திகள் சார்பாக ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்த தொடங்கியது. இந்த அமைப்புகளினால் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க அரசு சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டிருந்தது.அதிக மக்கள் கூடுவதற்கு தடை செய்யபட்டிருந்தது.

இதற்கு முன்னால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசை தொடர்ந்து JDP மற்றும் காங்கிரஸ் கூட்டணியும் அரசு சார்பில் நவம்பர் 10ம் தேதி திப்பு ஜெயந்தியாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை கைவிடுமாறு பாஜகவினர் அரசை கேட்டுக் கொண்டனர்.

திப்பு சுல்தானை இந்திய சுதந்திர போராளியாக கருதிய மாநில அரசாங்கம் திப்பு சுல்தானை பாராட்டும்பொழுது பாஜக மற்றும் அதை சார்ந்தவர்கள் மதவெறியினால் திப்புவை வெறுகின்றனர்.

கர்நாடக முதலமைச்சர் H D குமாரசுவாமி மருத்துவர் ஆலோசனையின் படி தற்போது எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கு கொள்ளமாட்டார் என்ற செய்தி அறிக்கை முன்னதாக வந்ததையொட்டி இந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்துக்கொள்ளமாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Top