You are here
Home > Uncategorized > தாண்டவபுரம் நாவலை தீயிட்டு கொழுத்திய இந்துமக்கள் கட்சி – த.மு.எ.க.ச கண்டனம்

தாண்டவபுரம் நாவலை தீயிட்டு கொழுத்திய இந்துமக்கள் கட்சி – த.மு.எ.க.ச கண்டனம்

மதுரை:இந்தியாவில் கருத்து சுதந்திரத்திற்கு மிகவும் அச்சுறுத்தலானவர்கள் பாசிச ஹிந்துத்துவா கும்பல்கள்தாம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தைச் சார்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாள் எழுதிய நாவல் தாண்டவபுரம். இது பக்தி இயக்க காலத்தை பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.

இந்த நாவல் சைவ மதத்தை விமர்சிப்பதாகக் கூறி கோவையில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் நாவல் பிரதியை எரித்துள்ளனர். ஆனால் போலீஸ் விசாரணையின் போது, அவர்கள் யாருமே இந்த நாவலைப் படிக்கவில்லை என்று கூறியுள்ளனர். தாம் கேள்விபட்டதை வைத்து முன்யோசனை இல்லாமல்தான் அறிவை அடகு வைத்துவிட்ட இந்துமக்கள் கட்சியினர் தாண்டவபுரம் நூலை எரித்துள்ளனர்.

இதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாநிலப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்கள் தங்களது கண்டன அறிக்கையில், “ஒரு படைப்பின் மீது யாருக்கும் விமர்சனமோ கருத்துவேறுபாடோ இருக்கலாம்.

அதை வெளிப்படுத்த ஜனநாயகப் பூர்வமான எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. ஆனால் பொதுஇடத்தில் ஒரு படைப்பை தீயிட்டு எரிப்பது என்பது மிகவும் இழிவான செயலாகும்.

கருத்துச் சுதந்திரத்திற்கும், படைப்புச் சுதந்திரத்திற்கும் எதிரான வன்முறை நடவடிக்கையாகவே இதைக் கருத வேண்டும். இந்த வன்முறையை தமுஎகச வன்மையாகக் கண்டிக்கிறது” என்று கூறியுள்ளனர்.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top