“80% இந்துக்களைக் கொண்ட இந்த நாட்டில் முழுக்க முழுக்க இந்துக்களுக்காக ஒரு கட்சி கூட இல்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு பல்வேறு கட்சிகள் இருக்கின்றன” என்கிறார் தமிழருவி மணியன்.
காந்தியின் பெயரில் இயக்கம் கண்ட தமிழருவி மணியன், காந்தியைக் கொன்ற கொலைகாரக் கூட்டம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் ஒவ்வொரு கட்டுக்கதையை அவிழ்த்து விடுவது வாடிக்கையென்றாலும், அவரது ஒப்பாரியை நடுநிலையாளர்கள் ரசிக்கவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.
இவரது மதவெறிக் கூட்டணியை அக்கடா, துக்கடா கட்சிகள் கூட விரும்பவில்லை என்பதால் தற்போது அவரது கோபம் முஸ்லிம்கள் மீது திரும்பியுள்ளது.
அதன் வெளிப்பாடே அவரது இந்த அரைவேக்காட்டு அறிக்கையாகும். இதில் எள்ளளவும் உண்மை இல்லையென்பதை நமது புள்ளிவிவரம் தோலுரித்துக் காட்டிவிட்டது.
முதலில் இந்த நாட்டில் 80 சதவீத இந்துக்கள் என்பது முழுப் பொய். அடுத்த பொய் இந்துக்களுக்காக இந்த நாட்டில் ஒரு கட்சி கூட இல்லை என்பது.
பொய்யருவி மணியனின் மெகா பொய்!
இந்துக்களுக்கு ஒரு கட்சி அல்ல… ஓராயிரம் கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் சிலதை மட்டுமே நாம் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
இந்துக்களுக்கான அரசியல் கட்சிகளின் அணிவகுப்பு இதோ:
ராஷ்ட்ரிய ஹிந்து சேனா
ஹிந்து ராஷ்டிரா சேனா
அகில இந்திய ஹிந்து மகா சபா
பாரதிய ஹிந்து மகாசபா
அகில பாரத ராம் ராஜிய பரிசத்
அகில பாரதிய ஹிந்து சக்தி தளம்
பாரதிய ஜன சங்க் – பாரதிய ராம் ராஜ்ய பரிசத்
பாரதிய சிவசேனா ராஷ்டிரவாடி
அகன்ற ஹிந்துஸ்தான் மோர்ச்சா
அப்னா ஹிந்து ராம் பகத் பார்டி
ஆரிய சபா
பாரதிய ஹிந்து சேனா (Indian Hindu Army)
பாரதிய ஜனதா கட்சி
பாரதிய ஜனசக்தி
பாரதிய சுதேசி சங்கஹந்து ஏக்தா அந்தோலன் கட்சி
ஹிந்து பிரஜா கட்சி
ஹிந்து சமாஜ் பார்ட்டி
ஹிந்து சுவராஜ் சங்கதன்
ராஷ்ட்ரிய ஹிந்து சங்கதன்
சனாதன் சான்ஸ்தா
ராஷ்ட்ரிய ஹிந்து மோர்ச்சா
ராமராஜ்ய மார்க்
ராம் சேனா ராஷ்ட்ரவாடி
ராஷ்ட்ரிய ஜாக்ரன் மன்ச்
சம்ராத் பாரத்
சிவா ராஜ்ய பார்ட்டி
ஷிவ் சேனா
அஸ்ஸாம் பாரதிய ஜனதா
நிகில் மணிப்புரி ஹிந்து மகா சபா
இந்து முன்னணி
ஹிந்து மக்கள் கட்சி
ஜனதா பார்ட்டி
மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா
தமிழ்நாடு ஹிந்து வெள்ளாளர் கழகம்
ஸ்ரீ ராம் சேனா
பாரதிய ஜனதா பகஷம் – கேரளா
ஹிந்துத்துவா கேரளம்
சனாதன் பிரபாத் – கோவா
ஹிந்து சம்ஹாதி – மேற்கு வங்கம்
ஹிந்து சுயம்சேவக் சங்கம்
ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவார்
இப்போது புதிதாக காந்திய மக்கள் இயக்கம், மதிமுக போன்ற கட்சிகள் தமிழகத்தில் முளைத்துள்ளன.
முழுப் பூசணிக்காயை சோற்றில் வைத்து மறைக்க முயற்சிக்கும் தமிழருவி மணியனே, இனிமேல் உங்களை பொய்யருவி என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி