தமிழக வயதான பெண்ணிற்கு மலேசியாவில் மரணத்தண்டனை-விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

no death penalty button

சென்னை:தமிழகத்தை சார்ந்த வயதான பெண்மணி ஒருவருக்கு மலேசிய நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்துள்ளது. சென்னைக்கு அருகே மாங்காடு பஜார் தெருவை சார்ந்தவர் பஸ்லா பீவி (வயது 62). இவர் மலேசியாவில் வீட்டு வேலைக்காக கடந்த 2009-ஆம் ஆண்டு ஏஜண்டு மூலமாக சென்றார். மலேசிய விமான நிலையத்தில் நடந்த பரிசோதனையில் பஸ்லா பீவியிடம் கெட்டாமின் என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் 5 தினங்களுக்கு முன்பு மலேசிய நீதிமன்றம் அவரை தூக்கிலிட உத்தரவிட்டுள்ளது. பஸ்லா பீவியை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க கோரி அவரது உறவினர்கள் தமிழக முதல்வர் மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் அளித்துள்ளனர்.

பஸ்லா பீவிக்கு நான்கு பெண் மக்கள் உள்ளனர். கணவர் இறந்துவிட்டதால் வளைகுடா நாட்டில் வீட்டு வேலை செய்து 4 பேரையும் திருமணம் செய்து கொடுத்தார் என அவரது மூத்த மகள் நூர்ஜஹான் கூறுகிறார். வளைகுடா நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய பிறகு வறுமையின் காரணமாக மீண்டும் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல 2009-ஆம் ஆண்டு திருவெல்லிக்கேணியில் ஒரு டிராவல் ஏஜன்சியை அணுகியுள்ளார்.

மலேசியாவில் இந்திய ரூபாய் 10 ஆயிரம் சம்பளத்தில் வீட்டுவேலை வாங்கி தருவதாக ஏஜண்ட் வாக்குறுதி அளித்துள்ளார். இதற்காக தன்னிடம் இருந்ததை எல்லாம் விற்று ஏஜண்டிற்கு 35 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார் பஸ்லா பீவி. மலேசியாவிற்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்ற பொழுது ஏஜண்ட் பஸ்லாபீவியிடம் ஒரு சூட்கேஸை கொடுத்து மலேசியாவிற்கு சென்றவுடன் ஒருவர் வந்து அதனை வாங்கிச்செல்வார் என தெரிவித்துள்ளார்.

ஏஜண்டை நம்பிய அபலைப் பெண்ணான பஸ்லா பீவி சூட்கேஸை திறந்து பார்க்கவில்லை. மலேசிய விமான நிலையத்தில் சோதனை நடத்திய பொழுது பஸ்லா பீவியின் சூட்கேஸில் இருந்தது கெட்டாமின் என்ற போதைப்பொருள் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மலேசியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பஸ்லா பீவியை இரண்டு மாதத்திற்குள் விடுதலை செய்ய ஏற்பாடு செய்வதாகவும், நான்கு லட்சம் இழப்பீடு வழங்கலாம் எனவும் வாக்குறுதி அளித்த ஏஜண்ட் அதனை நிறைவேற்றவில்லை என உறவினர்கள் அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர்

9 Responses to “தமிழக வயதான பெண்ணிற்கு மலேசியாவில் மரணத்தண்டனை-விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?”

  1. burç uyumu says:

    burç uyumu…

    tarot bak…

  2. testest says:

    Recent Blogroll Additions……

    [...]usually posts some very interesting stuff like this. If you’re new to this site[...]……

  3. Cool sites…

    [...]we came across a cool site that you might enjoy. Take a look if you want[...]……

  4. Related……

    [...]just beneath, are numerous totally not related sites to ours, however, they are surely worth going over[...]……

  5. Teledünya says:

    Teledünya…

    proportion we be in contact more approximately your article on AOL? I require a specialist on this house to unravel my problem. May be that is you! Looking ahead to look you….

  6. plumbing says:

    You should check this out…

    [...] Wonderful story, reckoned we could combine a few unrelated data, nevertheless really worth taking a look, whoa did one learn about Mid East has got more problerms as well [...]……

  7. Online Article……

    [...]The information mentioned in the article are some of the best available [...]……

  8. Links…

    [...]Sites of interest we have a link to[...]……

  9. You should check this out…

    [...] Wonderful story, reckoned we could combine a few unrelated data, nevertheless really worth taking a look, whoa did one learn about Mid East has got more problerms as well [...]……