You are here
Home > Uncategorized > ட்ரோன் தாக்குதல்களுக்கு தொலைபேசி பதிவுகளை உபயோகிக்கும் அமெரிக்கா!

ட்ரோன் தாக்குதல்களுக்கு தொலைபேசி பதிவுகளை உபயோகிக்கும் அமெரிக்கா!

வாஷிங்டன்:ட்ரோன் தாக்குதல் நடத்துவதற்கு உளவுத்துறை தகவல்களை விட தொலைபேசி பதிவுகளை அமெரிக்கா அதிகமாக உபயோகித்து வருகிறது.பிரபல பத்திரிகையாளர் க்ளென் க்ரீன்வார்டின் தலைமையில் அண்மையில் துவக்கப்பட்ட பத்திரிகையான இண்டர் செப்ட் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க குடிமக்கள் மற்றும் இதர நாடுகளின் ரகசியங்களை திருட்டுத்தனமாக அமெரிக்க உளவு ஏஜன்சியான என்.எஸ்.ஏ சேகரித்து வரும் தகவலை வெளியிட்ட எட்வர்ட் ஸ்நோடனுடன் பணியாற்றிய லாரா பெட்ராஸ் இண்டர் செப்டில் பணியாற்றுகிறார்.பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் என்.எஸ்.ஏ அதிகாரியை மேற்கோள்காட்டி இண்டர் செப்ட் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

தாலிபான் தலைவர்கள் உபயோகிக்கும் மொபைல் ஃபோன்களை குறி வைத்து அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்களை நடத்துவதாகவும், நிரபராதிகள் கொல்லப்படுவார்கள் என்று தெரிந்தே அமெரிக்கா இத்தாக்குதலை நடத்துவதாகவும் இண்டர் செப்ட் வெளியிட்ட தகவல் கூறுகிறது.

தாலிபான் தலைவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை உபயோகிக்கின்றனர்.இதனை பின்னர் இதர நபர்களுக்கு கைமாற்றுகின்றனர்.இதன் காரணமாக நிரபாரதிகள் ஏராளமானோர் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக இண்டர் செப்டின் அறிக்கை
கூறுகிறது.

Leave a Reply

Top