You are here
Home > Uncategorized > டெல்லி:குழந்தை பாலக் மரணம்

டெல்லி:குழந்தை பாலக் மரணம்

டெல்லி:கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு கொடிய தாக்குதலுக்கு உள்ளான குழந்தை பாலக் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தது.

கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி 15 வயது பெண் ஒருவர் 2 வயது குழந்தை பாலக்கை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தூக்கி வந்தார். அப்போது குழந்தை நினைவிழந்து இருந்தது.  கொடூரமான தாக்குதலின் காரணமாக பாலக்கின் தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. மேலும் அந்தக் குழந்தையின் உடம்பெங்கிலும் மனித கடி காயங்கள் ஏற்பட்டுள்ளன. கன்னத்தில் இரும்பு கம்பியைக் காயவைத்து இழுத்த தழும்பும், அதனைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களும் இருந்தது.  குழந்தைக்கு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதன் மூளையில் ரத்தம் கட்டியிருந்தது.

குழந்தையை தூக்கிவந்த இளம்பெண் மருத்துவமனையில் தான் பாலக்கின் தாய் என்று கூறியுள்ளார். இதனை நம்பாத மருத்துவர்கள் காவல்துறையிடம் தகவல் அளித்துள்ளனர்.

விசாரணையில் இளம்பெண் கொடூரமான தன் தந்தையிடம் இருந்து தப்பித்து இன்னொரு அரக்கனான ராஜ்குமாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார். ராஜ்குமார் இந்த இளம்பெண்ணை வன்புணர்ந்த பின் தனது வாடிக்கையாளர் ஒருவரிடம் விற்றுவிட்டான். அங்கு தான் இக்குழந்தையை கண்டுள்ளாள். அந்த கொடிய அரக்கண் இக்குழந்தையையும் வன்புணர்ந்து இப்பெண்ணிடம் விட்டுச் சென்றுள்ளான். இனி தப்புவது இயலாது என்று தெரிந்த பின் அந்த இளம்பெண் தனது இயலாமையை இந்த 2 வயது குழந்தையின் மீது காட்டியுள்ளார். குழந்தையை காப்பாற்ற அங்கிருந்து அந்தக் குழந்தையை தூக்கி வந்து மருத்துவமனையில் தான் குழந்தையின் தாய் என்று கூறி சிகிச்சை அளிக்குமாறு கேட்டுள்ளார் என தெரியவந்தது.

விசாரணைக்குப் பின் அந்த இளம்பெண் குழந்தைகள் நலக் காப்பகத்தில் விடப்பட்டார்.  மேலும் போலீசாரின் தேடுதல் வேட்டையில் கொடிய மனித மிருகம் ராஜ்குமார் மற்றும் அவனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஃபாலக்கை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

அந்த பிஞ்சுக் குழந்தைக்கு 6 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. சில நாட்கள் உடல் நிலை மேம்படுவதும், சில நாட்கள் மோசமடைவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் பாலக்கிற்கு நேற்றிரவு 9 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 9.40 மணிக்கு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

பாலக்கிற்கு ஏற்கனவே 2 முறை மாரடைப்பு ஏற்பட்டிருந்ததால் அதன் இதயம் மிகவும் வலுவிழந்து இருந்ததாக அதற்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் தீபக் அகர்வால் தெரிவித்தார்.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top