You are here
Home > Uncategorized > டிராவில் முடித்த இந்தியா- நியூசிலாந்து பயிற்சி போட்டி!

டிராவில் முடித்த இந்தியா- நியூசிலாந்து பயிற்சி போட்டி!

இந்தியா, நியூசிலாந்து லெவன் அணிகள் மோதிய பயிற்சி போட்டி டிராவில் முடிந்தது.

இந்தியா– நியூசிலாந்து லெவன் அணிகள் மோதும் 2 நாள் பயிற்சி ஆட்டம் வாங்கரேயில் நடந்தது.

நியூசிலாந்து லெவன் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 262 எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

முரளிவிஜய் 19 ஓட்டங்களிலும், தவான் 16 ஓட்டங்களிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று(திங்கட்கிழமை) 2–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.

முரளி விஜய் மேலும் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும், தவான் 26, புஜாரா 33 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர்.

4–வது விக்கெட்டான கேப்டன் ரோகித் சர்மா– ரகானே ஜோடி சிறப்பாக விளையாடியது, இருவரும் அரை சதம் எடுத்தனர்.

முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்கள் எடுத்ததால், ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 6ம் திகதி ஆக்லாந்தில் தொடங்குகிறது.

Leave a Reply

Top