You are here
Home > Uncategorized > ஜோதிடத்தின் பெயரால் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கேரள சாமியார் கைது

ஜோதிடத்தின் பெயரால் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கேரள சாமியார் கைது

சென்னை:ஜோதிடம், மந்திரவாதத்தின் பெயரால் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கேரள இளஞ்சாமியார் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் சோட்டானிக்கரையை சார்ந்த நந்தகுமார் (வயது 27) என்பவனை நீதிமன்றம் ரிமாண்ட் செய்ததை தொடர்ந்து சிறையில் அடைத்தது போலீஸ்.

கடன் சுமை, தொழில் முன்னேற்றம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு பரிகார கர்மங்களை செய்வதாக பத்திரிகைகளில் விளம்பரம் அளித்து பெண்களை கவர்ந்து வந்துள்ளான் இந்த நந்தகுமார். திருநெல்வேலியில் ஒரு லாட்ஜில் நேற்று முன்தினம் தங்கியிருந்த நந்தகுமாரை காணவந்த இரண்டு பெண்களில் ஒருவரை கண்ணை மூடி பிரார்த்திக்க கூறிய பிறகு அப்பெண்ணுடன் வந்த இன்னொருத்தியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.

உடனே அறையிலிருந்து வெளியே இறங்கி ஓடத் துவங்கிய அப்பெண்மணியை துரத்த ஆரம்பித்துள்ளான் இந்த கயவன். இதனைக்குறித்து கேள்வி கேட்ட லாட்ஜ் பணியாளர்களை தாக்கியுள்ளான். இதனைத்தொடர்ந்து லாட்ஜ் பணியாளர்கள் போலீஸிடம் புகார் அளித்தனர். திருச்சி, கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் இவன் பெண்களை வன்கொடுமை செய்ததாக போலீஸ் கூறுகிறது.

நாட்டில் தொடர்ந்து சாமியார்கள் கைது செய்யப்பட்ட பிறகும், அவர்களின் அந்தரங்க லீலைகள் தொடர்ந்து வெளியான பிறகு மூளையை அடகு வைத்த மக்கள் தொடர்ந்து இந்த கயவர்களின் கூட்டத்தை சுற்றிவருவது குறைந்தபாடில்லை. மூடத்தனங்களை கைக்கழுகி பகுத்தறிவை போதிக்கும் கொள்கையை எப்பொழுது இந்த மக்கள் ஏற்றுக்கொள்கின்றார்களோ அப்பொழுது தான் இத்தகைய காரிருளில் இருந்து விடுதலையை அவர்கள் பெறூவார்கள்.

Leave a Reply

Top