You are here
Home > Uncategorized > ஜே டே கொலை: ஜிக்னா ஓராவின் மின்னஞ்சல் தகவல்களை அளிக்க கூகிள் மறுப்பு!

ஜே டே கொலை: ஜிக்னா ஓராவின் மின்னஞ்சல் தகவல்களை அளிக்க கூகிள் மறுப்பு!

மும்பை:பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘மிட் டே’ பத்திரிகையின் க்ரைம் ரிப்போர்டர் ஜே டேயின் கொலை வழக்கில் கைதான பத்திரிகையாளர் ஜிக்னா ஓராவுக்கு நிழலுக தாதா சோட்டா ராஜன் அனுப்பியதாக கூறப்படும் மின்னஞ்சல் குறித்த தகவல்களை அளிக்க பிரபல இணையதள சேவைதளமான கூகிள் மறுத்துள்ளது.

இவ்வழக்கை விசாரித்து வரும் மும்பை க்ரைம் ப்ராஞ்சிடம், அமெரிக்க சட்டத்தை மேற்கோள்காட்டி ஜிக்னா ஓராவின் இரண்டு மின்னஞ்சல் முகவரிகளின் தகவல்களை அளிக்க கூகிள் மறுத்துள்ளது.

ஜே டே வின் அலுவலக முகவரிகள், வீடு, பைக்கின் நம்பர், ஃபோட்டோ ஆகியவற்றை ஜிக்னாவின் மின்னஞ்சல் வழியாக சோட்டா ராஜன் அனுப்பியதாக போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை சிறப்பு மஹராஷ்ட்ரா அமைப்பு ரீதியான குற்றம் தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் ஜிக்னா மீது தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில் முக்கிய குற்றச்சாட்டாக மேற்கூறியது இடம் பெற்றுள்ளது.ஆனால், இதற்கு விஞ்ஞான ரீதியான ஆதாரத்தை போலீஸ் அளிக்கவில்லை.

அமெரிக்காவின் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் பைரஸி ஆக்ட் 18 யு.எஸ்.ஸி 2702(A) அடிப்படையில் ஜிக்னாவின் மின்னஞ்சல் மூலமாக நடந்த தகவல் பரிமாற்ற விபரங்களை அளிக்க இயலாது என்று கூகிள் கூறியுள்ளது. ஜிக்னாவின் இரண்டு மின்னஞ்சல் கணக்குகளின் இன்பாக்ஸ், அவுட் பாக்ஸ், ட்ராஷ் ஆகியவற்றின் விபரங்களை கூகிளிடமிருந்து மும்பை போலீஸ் கோரியது. தூதரக சானல் வழியாக விளக்கங்கள் கேட்டால் அளிக்கப்படும் என்று கூகிள் கூறியுள்ளது. தூதரக சானல் வழியாக மீண்டும் கூகிளை தொடர்பு கொள்வோம் என்று மும்பை போலீஸ் அறிவித்துள்ளது.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top