You are here
Home > தலைப்புச்செய்தி > ஜெயந்தி நடராஜன் பதவி விலகினார்!

ஜெயந்தி நடராஜன் பதவி விலகினார்!

புதுடெல்லி: மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் தமிழகத்தைச் சேர்ந்த வருமான ஜெயந்தி நடராஜனின் பதவி விலகலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

அவரது அமைச்சுப் பொறுப்புகள் தற்போது மத்திய பெட்ரோலிய அமைச்சரான வீரப்ப மொய்லிக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் நெருங்குவதை அடுத்து, அவர் கட்சிப் பணிகளில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Top