You are here
Home > Uncategorized > ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அனுமதி

ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அனுமதி

புதுடெல்லி:ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வாழும்அனைத்து ஜாதியினரின் துல்லியமான விபரங்களை அறிவதற்கு ஜாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்புடன் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களைக் குறித்து கணக்கெடுப்பு நடத்தவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள், வறுமைக்கோட்டிற்கு மேலே வாழ்பவர்கள் என மக்கள் தொகை வாரியாக பிரிக்கப்படும். ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு 3500 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலிருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கும். பல்வேறு அரசியல் கட்சிகள் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக வலுவாக குரல் எழுப்பின. பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை இலக்காக கொண்டு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த இதன் மூலம் சாத்தியமாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை 121.02 கோடியாகும். இதில் 62.37 கோடி ஆண்களும், 58.65 கோடி பெண்களும் உள்ளனர்.

Leave a Reply

Top