You are here
Home > இஸ்லாம் > ஜனநாயகம் ஓர் ஆய்வு!

ஜனநாயகம் ஓர் ஆய்வு!

ஜனநாயகம் என்றால் மக்களுக்காக மக்களால் மக்களே ஆள்வது. இந்தியா உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு. இதில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், இன்னும் பல மதத்தவர்கள் வாழுகின்றனர்.

அதில் பொரும்பான்மையாக இந்துக்கள்தான் உள்ளனர். முஸ்லிம்கள் இரண்டாவது  பெரும்பான்மையினர். அப்படிப்பட்ட முஸ்லிம்கள் சுதந்திரப் போராட்டத்தில் தங்களுடைய முழு தியாகத்தை பதித்தனர்.

சுதந்திரம் கிடைத்து 66 ஆண்டுகள் ஆகிவிட்டன. சில இமாம்கள் ஜனநாயகம் ஹராம் என்று கூறுகின்றனர். இதைக் கேட்டு மக்கள் ஜனநாயகம் இஸ்லாதிற்கு முரணானது என்று கருதுகின்றனர். அப்படியல்ல. ஜனநாயகம் என்பது இஸ்லாத்தில் உள்ள சில கருத்தை உட்கொண்டதுதான்.

சில இமாம்கள் ஜனநாயகம் தவறு என்று கூற அவர்கள் கூறும் கருத்து அரசியல், தேர்தல் முறை மற்றும் பல. ஆனால் உண்மையில் ஜனநாயகத்தில் சில நல்ல கருத்துகளும் உள்ளன. அவற்றில் சில:

அரசியல்

தேர்தல் முறை

மதச் சுதந்திரம்

சமூக ஒற்றுமை

கலந்தாலோசனை

அரசியல்

இன்று மக்கள் அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கின்றனர். அந்தச் சாக்கடையில் ஏன் முஸ்லிம்களும் விழுகின்றனர் என்று சிலர் கிண்டலும் செய்து இருக்கிறார்கள். ஆட்சித் திறமையில் அரசியலின் முன்னோடியான உமர் (ரலி) அவர்களின் ஆட்சியைப் பற்றி இன்றும் பல நாட்டு தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உமர் (ரலி) அவர்கள் உலகில் பாதியை தன் கட்டுப்பாட்டில் சிறந்த முறையில் ஆட்சி செய்தார்கள். உமருடைய ஆட்சியைப் போல இந்தியாவில் ஆள வேண்டும் என்று காந்தி சொன்னார்.

தேர்தல் முறை

இந்தியாவில் ஊராட்சித் தலைவர் முதல் பிரதமர் வரை மக்களே தேர்வு செய்கின்றனர். அனைத்து மக்களின் நலனுக்காகத்தான் அவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆனால் பலர் அதைத் தவறாக பயன்படுத்துகிறார்கள்.

இந்தத் தேர்தல் முறையில்தான் நபி (ஸல்) அவர்கள் இறப்புக்குப் பின் கலீஃபாவாக அபூபக்கர் ஸித்தீக் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலீ (ரலி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தனி மனித சம்மதத்தோடு யாரும்  தேர்வு செய்யப்படவில்லை.

மதச் சுதந்திரம்

ஜனநாயக நாட்டில் நாம் வாழ்வதினால்தான் நாம் நம்முடைய மார்க்கத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த முடிகிறது. இதுவே நேபாளம், இலங்கை, வங்காளம் போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் தங்களுடைய மார்க்கத்தை வெளிப்படுத்த பல தடைகள் உள்ளன.

இன்னும் இந்திய அரசியல் சட்டத்தில் மார்க்கத்தை பிறரிடம் எடுத்துச் சொல்ல எந்த ஒரு தடையும் இல்லை. ஆனால் இந்தச் சுதந்திரம் வேறு எந்த  நாட்டிலும் கிடையாது. கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் வாழ்ந்த பிற மத மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். யாரும் மதம் மாற வற்புறுத்தப்படவில்லை.

ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் தலைமையில் பைத்துல் முக்கதஸ் வெற்றி கொள்ளப்பட்டது. அப்பொழுது மக்ரிபுடைய நேரம். அங்குள்ள பாதிரியார்கள் தங்களுடைய ஆலயத்தை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் உமர் (ரலி) அவர்கள் மறுத்தார்கள். காரணம். இன்று நான் தொழுகை நடத்தினால் நாளை மக்கள் இதைத் தவறாக புரிந்து கொள்வர் என்றார்கள்.

இஸ்லாமிய ஆட்சியில் பிற மத மக்களை பாதுகாக்க உமர் (ரலி) அவர்கள் ஜிஸ்யா வரியை விதித்தார்கள்.

கலந்தாலோசனை

நம் நாட்டில் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை மக்களின் பிரதிநிதியான எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் அவர்களுக்குரிய சபைகளில் கலந்தாலோசிக்கப்படும். இதற்கு பெயர் தான் கூட்டு ஆலோசனை அதாவது அரபியில் மஷுரா என்பது.

அல்லாஹ் தன் திரு மறையில் கூறுகிறான்:

நிச்சயமாக உண்மையான நம்பிக்கையாளர்கள் மெய்யாகவே யாரென்றால், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள்தாம். அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றி ஆலோசனை செய்ய அவ(னுடைய தூத)ரிடம் கூடியிருந்தால், அவருடைய அனுமதியின்றி (கூட்டத்திலிருந்து) அவர்கள் போகவே மாட்டார்கள். (அவ்வாறு போகவேண்டிய அவசியம் ஏற்பட்டால், நபியே!) நிச்சயமாக எவர்கள் உங்களுடைய அனுமதியைக் கோரி (பெற்றே) செல்கிறார்களோ அவர்கள்தாம் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாக நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே, அவர்கள் தங்களுடைய யாதொரு அவசர வேலைக்காக உங்களிடம் அனுமதி கோரினால், அவர்களில் நீங்கள் விரும்பிய வர்களுக்கு அனுமதி அளியுங்கள். அவர்களுக்காக அல்லாஹ் விடத்தில் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 24:62)

ஆரூர் யூசுஃப்தீன்

Leave a Reply

Top