You are here
Home > Uncategorized > செர்பியா பிரதமர் கொலை: ஒருவர் கைது

செர்பியா பிரதமர் கொலை: ஒருவர் கைது

மாட்ரிட்:செர்பியா பிரதமர் ஸொரான் ஜின்ஜிச் கொலை வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஸ்பெயினில் வைத்து கைது செய்யபப்ட்டார்.

பல்வேறு கொலை வழக்குகளில் செர்பியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சார்ந்த போலீசாரால் தேடப்பட்டு வந்த லூக்கா பொயோவிச் என்பவர்தாம் கைது செய்யப்பட்டவர். கிட்டத்தட்ட 20 கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொயோவிச், ஸைமன் என்ற பிரபல மாஃபியா கும்பலைச் சார்ந்தவர் என ஸ்பெயின் போலீஸ் அறிவித்துள்ளது.

கடந்த 2003-ஆம் ஆண்டு ஜின்ஜிச் செர்பியன் தலைநகரான பெல்க்ரேடில் வைத்து துப்பாக்கி ஏந்திய நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக 2007-ஆம் ஆண்டு செர்பியா நீதிமன்றம் 12 பேரை குற்றவாளிகள் என கூறியது. இக்கொலையில் முக்கிய சூத்திரதாரி என கருதப்படும் ஸ்ரெட்கோ காலினிச்சிற்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஜின்ஜிச்சின் சீர்திருத்த நடவடிக்கையை எதிர்த்து அவரது படுகொலை நிகழ்ந்தது.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top