You are here
Home > Uncategorized > சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி கலீல் ரஸ்ஸாக்கிற்கு ஆராய்ச்சிக்காக ரூ. 5 கோடி ஊக்கத்தொகை!

சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி கலீல் ரஸ்ஸாக்கிற்கு ஆராய்ச்சிக்காக ரூ. 5 கோடி ஊக்கத்தொகை!

ஹோஸ்டன்: சென்னையைச் சேர்ந்த அமெரிக்க நரம்பியல் விஞ்ஞானி கலீல் ரஸ்ஸாக்கின் ஆராய்ச்சிக்கு உதவித் தொகையாக, சுமார் 8.67 லட்சம் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 5.4 கோடி) அமெரிக்க ஆராய்ச்சி அமைப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் ரிவர்ஸைடில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர், சென்னையைச் சேர்ந்த கலீல் ரஸ்ஸாக். கேட்கும் திறனில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, தினசரி சப்தங்களை மூளை கிரகித்துக் கொண்டு அதை எவ்வாறு செயலாற்றுகிறது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார்.

இதற்காக அவரை பாராட்டிய அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய அறிவியல் அறக்கட்டளை (என்எஸ்எஃப்), அவரது ஆராய்ச்சியை தொடரும் விதமாக அவருக்கு இந்த ஊக்கத் தொகையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Top