You are here
Home > Uncategorized > சுகாதாரமற்ற முகாம்களில் நடத்தப்படும் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிட்சை – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

சுகாதாரமற்ற முகாம்களில் நடத்தப்படும் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிட்சை – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

புதுடெல்லி:இந்தியாவின் பல இடங்களில் சுகாதாரமற்ற முகாம்களில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிட்சை நடத்தப்படுவது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவின் மீதான விசாரணையில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த மனுவை நேற்று(திங்கள்கிழமை) விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.கோகலே ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்தப் புகார் தொடர்பாக இன்னும் 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தேவிகா பிஸ்வாஸ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் பீகார் மாநிலத்தில் நடந்த குடும்பக் கட்டுப்பாடு முகாமில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. போதிய பயிற்சியில்லாத தன்னார்வத் தொண்டர்கள் மயக்க மருந்தை அளித்துள்ளனர். ஒரு மணி நேரத்தில் 60 பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமை அரசுடன் இணைந்து ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தியது.

இதுபோன்று நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உரிய பயிற்சி பெறாதவர்களைக் கொண்டு சுகாதாரமற்ற சூழ்நிலையில் குடும்பக் கட்டுப்பாடு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதனால், ஆயிரக்கணக்கானோரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 60 பேருக்கு அறுவை சிகிட்சை செய்யப்பட்டதற்கான ஆவணங்களையும் தேவிகா மனுவுடன் தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Top