You are here
Home > தலைப்புச்செய்தி > சிறுபான்மை இளைஞர்களுக்கு எதிரான வழக்குகள் குறித்து மாநில முதல்வர்களுக்கு ஷிண்டே மீண்டும் கடிதம்!

சிறுபான்மை இளைஞர்களுக்கு எதிரான வழக்குகள் குறித்து மாநில முதல்வர்களுக்கு ஷிண்டே மீண்டும் கடிதம்!

புதுடெல்லி: சிறுபான்மை சமூக இளைஞர்களுக்கு எதிரான வழக்கில் மாநில அரசுகள் குழு அமைத்து பரிசீலிக்க வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு  2-வது முறையாக ஓரிரு நாளில் கடிதம் அனுப்ப இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஒரிஸாவின் கட்டாக்கை அடுத்த முண்டாலியில் நடைபெற்ற விழாவின் போது

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறுபான்மையினர் பிரிவில் முஸ்லிம்கள் தவிர மற்ற வகுப்பினரும் அடங்குவர்.சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பலர் தங்களது உறவினர்கள் விசாரணைஎதுவும் இல்லாமல் பல ஆண்டுகளாக சிறையில் வாடுவதாகத் தெரிவித்தனர்.

இதனால் மாநில முதல்வர்கள் குழுக்களை அமைத்து இப்படிப்பட்டவர்களின் மீதான புகார்கள் குறித்து நன்கு பரிசீலிக்க வேண்டும்.அப்போது அவர்கள் மீதுகுற்றம் இல்லை என்பது தெரிய வந்தால் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Top