You are here
Home > Uncategorized > சிரியாவுக்கு எதிரான தீர்மானத்தை வீட்டோ செய்தது எப்பொழுதும் தொடராது: ரஷ்யா எச்சரிக்கை

சிரியாவுக்கு எதிரான தீர்மானத்தை வீட்டோ செய்தது எப்பொழுதும் தொடராது: ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ:சிரியாவுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வீட்டோ செய்து தோற்கடித்ததை எப்பொழுதும் தொடரமாட்டோம் என ரஷ்யா கூறியுள்ளது.

சிரியா அரசும்,எதிர்கட்சிகளும் உள்நாட்டு பிரச்சனையை பரிசீலிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். முழுமையான தேசிய பேச்சுவார்த்தைக்கு வழிவகைச் செய்யவேண்டும் என ரஷ்யாவின் பாராளுமன்றத்தின் வெளியுறவுத்துறை தலைவர் மிகாயேல் மர்ஜிலோவ் தெரிவித்துள்ளார்.

சிரியா எதிர்கட்சி பிரதிநிதிகளுடன் மாஸ்கோவில் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிரியாவுக்கு எதிரான தீர்மானத்தை வீட்டோ செய்தது அந்நாட்டு அரசுக்கான ஆதரவு அல்ல. லிபியாவில் நிகழ்ந்தது போன்ற ராணுவ நடவடிக்கையை தவிர்க்கவே ஆகும். சிரியா அரசுடனோ, எதிர்கட்சிகளுடனோ எங்களுக்கு தனிப்பட்ட ரீதியாக விருப்புவெறுப்பு இல்லை. இரு பிரிவினரையும் பேச்சுவார்த்தைக்கான வழியை உருவாக்க வாய்ப்பை ஏற்படுத்துவதுதான் நோக்கம் என மர்ஜிலோவ் தெரிவித்தார்.

சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவோ அல்லது பதவி விலகவோ செய்யவேண்டும் என சிரிய அரசிடம் நேற்று முன் தினம் ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் கோரிக்கை விடுத்திருந்தார்.

சிரியா அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதை வெளியேற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்யக்கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதேவேளையில், சிரியாவுக்கு எதிரான தீர்மானத்தை வீட்டோ செய்த நடவடிக்கையை மாஸ்கோவிற்கு சென்றுள்ள சிரியா எதிர்கட்சி பிரதிநிதிகள் பாராட்டினர்.

சிரியாவின் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை தடுத்த ரஷ்யாவுக்கு நன்றி தெரிவிப்பதாக நேசனல் கம்யூனிட்டி ஃபார்  யூனிட்டி ஆஃப் சிரியன் கம்யூனிஸ்ட்ஸ் செயலாளர் ஜெனரல் காதிரி ஜமீல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Top