You are here
Home > Uncategorized > இந்தியா > சிபிஐயின் அடுத்த குறி ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்!

சிபிஐயின் அடுத்த குறி ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்!

ஹரியானா மாநில முன்னாள் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் பூபீந்தர் சிங் ஹூடா ஹரியானா மாநிலத்தின் மறுவாழ்வுத் திட்டத்தினை ஒதுக்கியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளது. இதன் மூலம் முன்னாள் ஹரியானா முதலமைச்சர் பூபீந்தர் சிங் ஹூடா, மூத்த காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா மற்றும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏ.ஜே.எல்) என்ற நிறுவனத்தின் மீதும் எதிராக குற்றபத்திரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டின் மூலம்  நிலக்கண்ணிப்படி 67 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ கணித்துள்ளது.

பஞ்குலா பகுதியில் உள்ள 3,360 சதுர மீட்டர் நிலப்பரப்பு 1982 ஆம் ஆண்டு ஏ.ஜெ.எல். நிறுவனத்திற்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 1992 வரை அங்கு எந்த கட்டுமானமும் கட்டப்படவில்லை இந்தத் திட்டம் பின்னர் ஹரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் திருப்பப்பெற்றது. இருப்பினும் 2005 ஆம் ஆண்டில், ஹரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (HUDA) வழங்கிய விதிமுறைகளை மாற்றி மீண்டும் அந்த நிறுவனத்திடம் நிலம் ஒப்படைக்கபட்டது. அந்த சமயத்தில் ஹூடா நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

இதன் காரணமாக இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் குற்றவியல் சதித்திட்டங்கள் மற்றும் விவகாரங்கள் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Top