You are here
Home > Uncategorized > சிட்னி டெஸ்ட்- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 659/4 எடுத்து டிக்ளர்

சிட்னி டெஸ்ட்- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 659/4 எடுத்து டிக்ளர்

சிட்னி:ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையில் சிட்னியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா  4 விக்கெட் இழப்பிற்கு 659 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் ரிக்கிபாண்டிங் 134 ரன்களை எடுத்து இஷாந்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் 329 ரன்களும், மைக்கேல் ஹூசே 150 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடினர்.  இந்திய அணியின் மோசமான பீல்டிங் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக அமைந்தது.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 114 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகின்றது. இந்திய அணியின் தொடக்க வீரர் காம்பிர்  68 ரன்களுடனும் சச்சின் டெண்டுல்கர் 8 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். முன்னதாக விளையாடிய சேவாக் 4 ரன்களும் ராகுல் டிராவிட் அவுட் 29 ரன்களும் எடுத்து அவுட்டாயினர்.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின்படி ஆஸ்திரேலியாவை விட 354 ரன்கள் பின்னிலையில் உள்ளது.

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று 1-0என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.

Leave a Reply

Top