You are here
Home > Uncategorized > சவூதியில் நிறைவேற்றப்படும் மரணதண்டனைகள்!

சவூதியில் நிறைவேற்றப்படும் மரணதண்டனைகள்!

ரியாத்: சவூதி அரேபியாவில் கொலை, கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல், மத அவமதிப்பு ஆகிய குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், தாய்ஃப் நகரைச் சேர்ந்த அப்துல்லாஹ் அல் ஒடாய்பி என்பவர் சக பழங்குடியினத்தவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அதுபோன்று தென்கிழக்கிலுள்ள அசிர் பகுதியை சேர்ந்த நசிர்-அல்-கடானி, அயெத்-அல்-கடானி என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இவர்கள் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து நேற்று அவர்களின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சவூதி அரேபியாவில் 78 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து சவூதியில் மரண தண்டனை அதிகம் நிறைவேற்றப்படுவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் அறிக்கை வெளியிட்டது. உலக நாடுகளின் கண்டிப்புக்கு அஞ்சாமல், சவூதி அரசு தொடர்ந்து மரண தண்டனைகளை நிறைவேற்றுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Top