You are here
Home > Uncategorized > சயனைடு கொலையாளி மோகன்குமாருக்கு தூக்குத்தண்டனை:நீதிமன்றம் தீர்ப்பு!

சயனைடு கொலையாளி மோகன்குமாருக்கு தூக்குத்தண்டனை:நீதிமன்றம் தீர்ப்பு!

மங்களூர்: சயனைடு விஷத்தைப் பயன்படுத்தி 3 பேரைக் கொன்ற கொலையாளிக்கு மங்களூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து சனிக்கிழமை தீர்ப்பு கூறியது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார். இவன்  5 ஆண்டுகளுக்கு முன்பு வாமடபடவு பகுதியைச் சேர்ந்த லீலாவதி, பன்ட்வால் தாலுகா பரிமார்கிராமத்தைச் சேர்ந்த அனிதா (22), பெருவஜே பகுதியைச் சேர்ந்த சுனந்தா ஆகியோரை சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்ததாக கர்நாடக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பி.கே.நாயக், மோகன்குமாருக்கு மரண தண்டனை விதித்து சனிக்கிழமை தீர்ப்பு கூறினார். இந்தக் கொலை வழக்கில் மோகன் குமார் கடந்த 2009ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Top