You are here
Home > Uncategorized > சமாஜ்வாதி கட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வாழ்த்து!

சமாஜ்வாதி கட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வாழ்த்து!

புதுடெல்லி:உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் அபார வெற்றியை பெற்ற சமாஜ்வாதி கட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுத்தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

2007-ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த சமாஜ்வாதி கட்சி தற்போது பெற்றுள்ள வெற்றி பாராட்டத்தக்கது ஆகும். ஜாதியவாதத்தை கடந்து உத்தரபிரதேச மக்கள் சமாஜ்வாதி கட்சியை ஆட்சி கட்டிலில் அமர்த்தியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் மாயாவதி ஜாதிய வாக்காளர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு தவறிவிட்டார் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணம் முஸ்லிம்களின் வாக்கு என்பது மறுக்க முடியாத உண்மையாகும். முஸ்லிம்களின் வாக்குகளினால் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது என்பதை பகுஜன் சமாஜ் கட்சி கூட ஒத்துக்கொண்டுள்ளது.

முஸ்லிம்கள் தங்களின் வாக்குகளினால் சமாஜ்வாதி கட்சியை வெற்றிப்பெறச் செய்துள்ளதை பார்க்கும்போது தங்களின் வாக்குகளின் மதிப்பை குறித்து முஸ்லிம்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர் என்பது நிரூபணமாகின்றது.

காங்கிரஸின் இட ஒதுக்கீடு என்ற தேர்தல் வாக்குறுதியை கூட முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை.

முஸ்லிம்கள் இந்த தேர்தலில் முஸ்லிம் சமூகத்தை பலப்படுத்தும் விஷயத்திற்கு முன்னுரிமை கொடுத்து தங்களின் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தல் நேரத்தில் வழங்கப்படும் பொய்யான வாக்குறுதிகளை கண்டு முஸ்லிம்கள் இனி மேலும் ஏமாற மாட்டார்கள் என்பதும், தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுபவர்களுக்குத் தான் தங்கள் வாக்கு என்பதும் இதன் மூலம் முஸ்லிம்கள் நிரூபித்துள்ளனர்.

ஆட்சிக்கு வந்துள்ள சமாஜ்வாதி கட்சி முஸ்லிம்களின் இந்த மனோநிலையை புரிந்துகொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடவேண்டும். இதன் முதல் படியாக அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு போதிய இடங்கள் வழங்கவேண்டும்.

அடுத்து தேர்தல் அறிக்கையில் கூறியபடி முக்கியமான விஷயங்களான சச்சார் அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் மற்றும் முஸ்லிம்களின் சமூக பொருளாதார வாழ்க்கைத் தரத்தில் கவனம் செலுத்துதல் ஆகியனவாகும். அனைத்திற்கும் மேலாக முஸ்லிம் வாக்காளர்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.

உத்தரபிரதேச முஸ்லிம்களால் உன்னிப்பாக உற்று நோக்கப்படவிருக்கும் மற்றொரு முக்கியமான விஷயம் குண்டுவெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம்கள் மீது போடப்பட்டுள்ள போலி வழக்குகள் ஆகும். இதை கவனத்தில் கொண்டு சமாஜ்வாதி கட்சி முஸ்லிம்களுக்கு நீதி வழங்கவேண்டும்.

இறுதியாக சமாஜ்வாதி கட்சி முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தொடர்பாக ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்த கோரி மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என்பதாகும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமாஜ்வாதி கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் இந்த அணி நல்ல மாற்றத்தை கொண்டுவரும் என நம்பிக்கையையும் தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு கே.எம்.ஷெரீஃப் கூறியுள்ளார்.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top