You are here
Home > Uncategorized > சமச்சீர்கல்வி:உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சமச்சீர்கல்வி:உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி:முந்தைய தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான சமச்சீர் கல்வித்திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக ரத்துச்செய்ய சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் நிறைவேற்றிய அ.இ.அ.தி.மு.க அரசு தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது.

தமிழக அரசின் நிபுணர் குழு அளித்த அறிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தத்தை ரத்துச் செய்து சமச்சீர் கல்வியை உடனடியாக அமுல்படுத்த உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அ.இ.அ.தி.மு.கவின் கூட்டணி கட்சிகளே சமச்சீர் கல்வியை அமுல்படுத்தக் கோரியும் பொருட்படுத்தாமல் பிடிவாதமாக மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது அ.இ.அ.தி.மு.க அரசு.

அந்த மனுவில், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது. பாடப் புத்தகங்கள் தரமற்ற பாடத்துடன் உள்ளன. எனவே நடப்பாண்டில் பழைய பாடத் திட்டத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துள்ளது. மேலும், வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 26-ம் தேதி நடக்கிறது.

Leave a Reply

Top