You are here
Home > Uncategorized > சச்சினுக்கு பாரத ரத்னா!

சச்சினுக்கு பாரத ரத்னா!

புதுடெல்லி: சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருதை வழங்கி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கௌரவித்துள்ளார். கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படுவர் சச்சின் தெண்டுல்கர். தனது 200வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார்.

24 ஆண்டுகள் நீண்ட நெடும் பயணத்துக்குப் பிறகு கடந்த நவம்பர் 16ம் திகதி சொந்த மண்ணில் பிரியாவிடை பெற்றார். டெண்டுல்கரின் சாதனைகளை பாராட்டும் விதமாகவும், இந்திய அணிக்கு அவரது சேவைகளை கவுரவிக்கும் விதமாகவும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அவர் ஓய்வு பெற்ற தினத்தில் மத்திய அரசு இதை அறிவித்தது.

இந்நிலையில் பாரத ரத்னா விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று மதியம் 12.05 மணி அளவில் நடந்தது. அவ்விழாவில், டெண்டுல்கருக்கு, ஜனாதிபதி பாரத ரத்னா விருதை வழங்கினார். பெருமைக்குரிய இந்த விருதை அவர் பெறும்போது மனைவி அஞ்சலியும், மகள் சாராவும் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

பாரத ரத்னா விருதை பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை டெண்டுல்கர் பெற்றார். மேலும் குறைந்த வயதில் இந்த விருதை பெற்றவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.

Leave a Reply

Top