You are here
Home > Uncategorized > கைது செய்யப்பட்ட அல்காயிதா போராளி இரட்டை ஏஜண்ட்?

கைது செய்யப்பட்ட அல்காயிதா போராளி இரட்டை ஏஜண்ட்?

வாஷிங்டன்:உள்ளாடையில் வெடிப்பொருளை மறைத்து வைத்து விமானத்தை தகர்க்க முயன்றதாக கைது செய்யப்பட்டார் என்று கூறப்படும் அல்காயிதா போராளி சவூதி புலனாய்வு துறையைச் சார்ந்த ஏஜண்ட் என செய்தி வெளியாகியுள்ளது.

அல்காயிதாவின் ரகசியங்களை அறிய சவூதி புலனாய்வு துறையும், அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏவும் இணைந்து யெமனுக்கு அனுப்பப்பட்ட நபர்தாம் கைது செய்யப்பட்ட நபர் என்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி அசோசியேட் ப்ரஸ்ஸும், நியூயார்க் டைம்ஸும் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் தற்பொழுது பாதுகாப்பாக சவூதி சென்றுவிட்டார் என்றும் அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

அல்காயிதாவில் ஊடுருவி ரகசியங்களை சவூதி அதிகாரிகளுக்கும் அவர்கள் மூலமாக சி.ஐ.ஏவுக்கும் கைமாற இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பல வாரங்களாக தங்களுடன் பணியாற்றிய சவூதி ஏஜண்டை அமெரிக்க விமானத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்த யெமன் அல்காயிதா அமைப்பு நியமித்ததாம். இவரின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருளை விமானநிலைய பரிசோதனையில் கண்டுபிடிக்க சிரமமாக இருந்தது என்று அமெரிக்க அதிகாரி கூறுகிறார். இவர் அளித்த தகவலின் அடிப்படையில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் யெமனின் அல்காயிதா தலைவர் ஃபஹத் அல்குஸா கொல்லப்பட்டாராம்.

கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நபரைக் குறித்தோ அவர் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது குறித்தோ அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

2009-ஆம் ஆண்டு அமெரிக்க விமானநிலையத்தில் நடத்த தாக்குதல் முயற்சிக்கு சமமான சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Top