You are here
Home > Uncategorized > கேரளா:ரூபெல்லா தடுப்பூசியின் பின்னணியில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டமா?

கேரளா:ரூபெல்லா தடுப்பூசியின் பின்னணியில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டமா?

காஸார்கோடு(கேரளா):கேரள மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சகம் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வரும் ரூபெல்லா தடுப்பூசியின் பின்னணியில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டம் உள்ளதா? என்பதுக் குறித்த சந்தேகம்எழுந்துள்ளது.நோய் தடுப்பு என்ற பெயரால் சிறுமிகளின் கர்ப்பமாகும் சக்தியை குறைப்பதற்கான ரகசிய அஜண்டா ரூபெல்லா தடுப்பூசியின் பின்னணியில் இருப்பதாக இதுத்தொடர்பான ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

யூனிசெஃபின் யுனைட்டட் நேசன் ஃபண்ட் ஃபார் பாப்புலேசன் அலிவியேஷன்(யு.என்.எஃப்.பி.ஐ) மூலம் நடைமுறைப்படுத்தப்படும் மக்கள் தொகை கட்டுப்பாட்டு ப்ரோக்ராமின் ஒரு பகுதியாக தீவிர தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ராக் பெல்லர் ஃபவுண்டேஷன் இதற்கான நிதியுதவியை அளிக்கிறது.மக்கள் தொகை கட்டுப்பாட்டை நோக்கமாக கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் தடுப்பூசி திட்டங்களுக்கு இவ்வமைப்பு நிதியுதவி அளித்து வருகிறது.இந்த ஏஜன்சியின் 1968-ஆம் ஆண்டைய வருடாந்திர அறிக்கையில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிர தடுப்பூசி திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.கர்ப்பமாகும் சக்தியை தடுக்கும் பல்வேறு தடுப்பூசிகளை உலகம் முழுவதும் தீவிரப்படுத்துவதற்கான அவசியம் குறித்தும் அந்த அறிக்கை கூறுகிறது.

உலகில் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலை நிறுத்த மக்கள் தொகையை குறைப்பதே ஒரே வழி என்றும், இதற்கு தீவிர தடுப்பூசி முறை அத்தியாவசியம் என்றும் யூனிசெஃப் வெளியிட்ட ’அசைன்மெண்ட் சில்ட்ரன் யூனிவர்சல் சைல்ட் இம்யூனேசன்’ என்ற அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.கர்ப்பமாவதை தடுக்கும் ஹார்மோன்கள் கலந்து தடுப்பூசி போடப்படுகிறது என்பதை பல ஆய்வுகளும் தெளிவுப்படுத்தியுள்ளன.

மும்பையில் சீரம் இன்ஸ்ட்யூட் ஆஃப் இந்தியா என்ற தனியார் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசியை  கேரள மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சகம் ரூபெல்லா தடுப்பூசி என்ற பெயரில் சிறுமிகளுக்கு நடைமுறைப்படுத்துகிறது.பொதுத்துறை நிறுவனங்கள் இத்தகைய தடுப்பூசிகளை தயாரிப்பதில்லை.1985-ஆம் ஆண்டு டெட்டனஸ் நோயை தடுப்பதாக கூறி பிலிப்பைன்ஸ் நாட்டில் தடுப்பூசி போடப்பட்ட சிறுமிகளுக்கு பின்னர் ஆட்டிசம் நோய் பாதித்தது.பின்னர் நடத்திய புலனாய்வில் அந்த தடுப்பூசியில் 20 சதவீதம் ஹெச்.சி.ஜி என்ற கர்ப்பம் உருவாவதை தடுக்கும் ஹார்மோன் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.புதிய பெயர்களில்
வந்துகொண்டிருக்கும் தடுப்பூசிகளில் விபரீத விளைவுகளை உருவாக்கும் ஹார்மோன்கள் கலக்கப்பட்டது என்று மக்கள் சுகாதார துறையில் பணியாற்றுபவர்கள் கூறுகின்றனர்.

உலக மக்கள் தொகையை 5.5 பில்லியனாக குறைக்கும் வழிமுறைகளை அறிவுறுத்தும் சி.ஐ.ஏவின் அதிகாரி உள்ளிட்ட குழுவினர் தயாரித்த நேசனல் செக்யூரிட்டி சர்வே மெமோரண்டம் 200 என்ற ரகசிய ஆவணம்தான் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்திற்கு ஆதார ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது.1952-ஆம் ஆண்டு கண்டுபிடித்த ரூபெல்லா நோயை உருவாக்கும் டோகோ வைரஸுகளுக்கு 1969-ஆம் ஆண்டு முதல் தடுப்பூசி நடைமுறையில் இருந்த பிறகும் நாற்பது ஆண்டுகள் கழித்து தீவிரமாக ரூபெல்லா தடுப்பூசியை நடைமுறைப்படுத்துவதன் பின்னணியில் உள்ள மர்மத்திற்கு விளக்கமளிக்க கேரள சுகாதாரத்துறை அதிகாரிகளால்
இயலவில்லை.ஜெர்மன் மீஸில்ஸ் என்ற பெயரில் அறியப்படும் காய்ச்சல் வராமல் தடுக்கிறோம் என்ற பெயரால் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை பயிலும் மாணவிகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது.

அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிக்கூடங்களில் பயிலும் ஏழரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடும் திட்டம் உள்ளது.ஆனால், பணக்காரர்களின் மக்கள் பயிலும் சி.பி.எஸ்.இ, மானியம் இல்லா பள்ளிக்கூடங்கள் மற்றும் மத்திய அரசு கல்வி நிலையங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Top