You are here
Home > Uncategorized > கேரளா:இடைத் தேர்தலில் காங். அபார வெற்றி!

கேரளா:இடைத் தேர்தலில் காங். அபார வெற்றி!

பிறவம்(கேரளா):தேசிய கவனத்தை ஈர்த்த கேரள மாநிலம் பிறவம் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அனூப் ஜேக்கப் 12,070 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ஈட்டியுள்ளார். அவர் இடதுசாரி கூட்டணி வேட்பாளர் எம்.ஜே.ஜேக்கப்பை தோற்கடித்தார்.

மொத்தம் பதிவான 1,58,261 வாக்குகளில் காங்.வேட்பாளரான அனூப் ஜேக்கப் 82,756 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சி.பி.எம் வேட்பாளர் எம்.ஜே.ஜேக்கப் 70, 686 வாக்குகளைப் பெற்று 2-வது இடத்தைப் பிடித்தார். பா.ஜ.க வேட்பாளர் கே.ஆர்.ராஜகோபாலிற்கு 3,241 வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை இழந்து படுதோல்வியை சந்தித்தார். கடந்த தேர்தலில் பா.ஜ.கவுக்கு இத்தொகுதியில் 4234 வாக்குகள் கிடைத்தன.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top