You are here
Home > Uncategorized > கேம்பஸ் ஃப்ரண்ட் தேசிய தலைவராக அனீஸ்ஸுஸமான் தேர்வு!

கேம்பஸ் ஃப்ரண்ட் தேசிய தலைவராக அனீஸ்ஸுஸமான் தேர்வு!

மங்களூர்:அகில இந்திய அளவில் வளர்ந்துவரும் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவராக அனீஸ்ஸுஸமான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பொதுச் செயலாளர்களாக  கேரளா மாநிலத்தைச் சார்ந்த சி.எ.ரவூஃப் மற்றும் ராஜஸ்தானைச் சார்ந்த ஆஸிஃப் மிர்ஸா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கர்நாடாகாவைச் சார்ந்த முஹம்மது ஷாக்கிர் துணைத் தலைவராகவும், டெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் ஸலீம் ஜஹாங்கீர் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேற்குவங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சார்ந்த அனீஸ்ஸுஸமான் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஆவார். மங்களூரில் நேற்று நடைபெற்ற தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கமிட்டி உறுப்பினர்கள்:அப்துல்ரஹ்மான், ஹஸன் ஷேக், இனாமுர் ரஹ்மான், லுக்மானுல் ஹகீம், கெ.எம்.நவ்ஷாத், ஷஹ்ஸுல் ஸஈத்.

பிரதிநிதிகள் மாநாட்டை துவக்கி வைத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தனது உரையில், “ஆளுங்கட்சி-எதிர்கட்சிகளின் பிரதிநிதிகளாக செயல்படும் மாணவர் அமைப்புகள் மேல் ஜாதியினரின் உபகரணங்களாக செயல்படும் சூழலில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாறுபட்ட கொள்கைகளும், பணிகளும் கவனத்தை ஈர்க்கிறது” என்று கூறினார்.

“உலகமயமாக்கல், ஏகாதிபத்தியம், வகுப்புவாதம், பாசிசம், கல்வி வியாபாரமயமாக்கல் ஆகியன முஸ்லிம்களையும், தலித்துகளையும் மட்டும் பாதிக்க கூடியது அல்ல. இத்தகைய சமூக தீமைகளுக்கு எதிராக போராடக்கூடிய ஏராளமான அமைப்புகள் உள்ளன. இவர்களுடம் விரிவான தொடர்பு ஏற்படுத்தப்படும்” என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் அனீஸ்ஸுஸமான் கூறினார்.

பிரதிநிதிகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: டெல்லியில் கைதான பத்திரிகையாளர் அஹ்மத் காஸ்மியை விடுதலைச்செய்ய வேண்டும், கல்வி துறையில் காவி மயமாக்கலை நிறுத்தவேண்டும், மாணவர்கள் அரசியலை கேம்பஸ்களில் அனுமதிக்க வேண்டும் ஆகியனவாகும்.

Leave a Reply

Top