You are here
Home > Uncategorized > கெளரவக்கொலை:10 பேருக்கு தூக்குத்தண்டனை

கெளரவக்கொலை:10 பேருக்கு தூக்குத்தண்டனை

இட்டா:உத்தரபிரதேச மாநிலத்தில் கெளரவக்கொலை தொடர்பான வழக்கில் 10 பேருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. வீட்டிலிருந்து காதலனுடன் ஓடிய பெண் உள்பட 3 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இவ்வழக்கில் மொத்தம் 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். அதில் 10 பேருக்கு தூக்குத்தண்டனையும், ஒருவருக்கு ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டது. ஒருவரை குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுதலை செய்தது. குற்றவாளிகள் 10 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

கடந்த 2008 நவம்பர் மாதம் இவ்வழக்கு தொடர்பான சம்பவம் நடைபெற்றது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ரமேஷ் பாலின் மகள் வித்யா, உதய்பால் என்ற இளைஞருடன் வீட்டிலிருந்து ஓடினார். இவர்களுடன் உதய்பாலின் சகோதரன் சத்யபானாவும் சென்றார். பாலுகேரா கிராமத்தில் வைத்து ரமேஷ்பால் இவர்களை பிடித்துவிட்டார். தில்கஸ்ரா கிராமத்தில் கொண்டுவருவதற்கு முன்பு அவர்களை பயங்கரமாக தாக்கினார். பின்னர் அவர்களை சுட்டுக்கொன்றார்.

Leave a Reply

Top