You are here
Home > Uncategorized > குருநாத் மெய்யப்பன் குற்றவாளி! விசாரணை கமிட்டி

குருநாத் மெய்யப்பன் குற்றவாளி! விசாரணை கமிட்டி

சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் காப்பாளருமான குருநாத் மெய்யப்பன் குற்றவாளியே என விசாரணை குழு தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

கிரிக்கெட் வீரர்கள், அணியின் உரிமையாளர்கள் மற்றும் தரகர்கள் என பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒரு வரான ராஜ்குந்த்ரா ஆகியோருக்கும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

கிரிக்கெட் வாரியம் சார்பில் விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதிகள் ஜெயராம் சவுதா, பாலசுப்ரமணியன் ஆகியோர் இருவருக்கும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் தொடர்பு இல்லை என்று தனது அறிக்கையில் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பீகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது, ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி முகுலை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.

கடந்த 4 மாதங்களாக நீதிபதி முகுல் கமிட்டி பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தியது. வீரர்கள், பத்திரிகையாளர்கள், ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள், பொலிசார் ஆகியோரிடம் விவரங்களை கேட்டு இருத்தனர்.

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

முகுல் முத்கல் கமிட்டியின் இந்த விசாரணை அறிக்கை 170 பக்கங்களில் இருந்தது.

இந்த அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது, இதில் குருநாத் மெய்யப்பன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் வருகிற 12ம் திகதி தொடங்கவுள்ள ஐபிஎல் ஏலம் பாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

 

Leave a Reply

Top