You are here
Home > Uncategorized > குஜராத்தில் மத சுதந்திரத்தை அனுமதிக்க அமெரிக்க காங்கிரஸில் தீர்மானம்!

குஜராத்தில் மத சுதந்திரத்தை அனுமதிக்க அமெரிக்க காங்கிரஸில் தீர்மானம்!

வாஷிங்டன்:இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மத சுதந்திரத்தை புனரமைக்க வேண்டும் என்று கோரி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பு சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவு தினத்தில் கெய்த் எலிஸன் என்பவர் இத்தீர்மானத்தை கொண்டுவந்தார்.

டெமோர்க்ரேட்டுகளின் பிரதிநிதியான எலிஸன், 2007 முதல் பிரதிநிதிகள் சபையில் உறுப்பினர் ஆவார். மேல் நடவடிக்கைக்காக தீர்மானம் வெளியுறவு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத் இனப் படுகொலையில் கொலைச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் மோடியின் அரசு எடுக்கவில்லை என்று தீர்மானம் குற்றம் சாட்டுகிறது.

குஜராத்தில் மத சுதந்திரம் மறுக்கப்பட்டதை தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்தது. 1998-ஆம் ஆண்டு சர்வதேச மத சுதந்திர சட்டத்தில் இதற்கான அனுமதி உள்ளது என்று தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. இத்தீர்மானத்தை இந்திய-அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் வரவேற்றுள்ளது. இனப் படுகொலையில் கொலைச் செய்யப்பட்டவர்கள் மீதான மிக சிறந்த மதிப்புதான் இந்த தீர்மானம் என்று கவுன்சிலின் அறிக்கை கூறுகிறது.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top