You are here
Home > Uncategorized > குஜராத்:கண்காணிப்பு நடந்திருந்தால் விசாரணை!-சுசில் குமார் ஷிண்டே!

குஜராத்:கண்காணிப்பு நடந்திருந்தால் விசாரணை!-சுசில் குமார் ஷிண்டே!

புதுடெல்லி:குஜராத் அரசு பெங்களூரைச் சார்ந்த பெண்மணியை கண்காணிக்க உத்தரவிட்ட விவகாரம் உண்மை என்றால் அதனைக்குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே தெரிவித்தார். விசாரணை கோரி தேசிய மகளிர் கமிஷனின் கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். கடிதம் கிடைத்தால் அடுத்த நடவடிக்கைகளை அமைச்சகம் எடுக்கும் என்று தெரிவித்த ஷிண்டேவிடம், காங்கிரஸ் கட்சி விசாரணை கோரியுள்ளதே? என்று தெரிவித்தபோது, அரசு யாருடைய பக்கமும் சேரவில்லை என்று தெரிவித்தார்.

அதேவேளையில் குஜராத் போலீஸ் இளம்பெண்ணை கண்காணித்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த அம்மாநில அரசிடம் மகளிர் கமிஷன் கோரிக்கை விடுத்துள்ளது. புலனாய்வு செய்தி இணையதளங்களான குலைல் மற்றும் கோப்ரா போஸ்ட் ஆகியன பெங்களூரைச் சார்ந்த இளம்பெண்ணை மோடி போலீஸ் கண்காணித்த செய்தியை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தேசிய மகளிர் கமிஷன் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவுச் செய்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க குஜராத் அரசுக்கு கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யாருக்கேனும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் போலீஸ் இவ்வாறு கண்காணிப்பது வழக்கம். ஆனால், இச்சம்பவத்தில் சில சந்தேகங்கள் உள்ளன என்று மகளிர் கமிஷனின் உறுப்பினர் நிர்மலா சாமந்த் தெரிவித்தார்.

இளம்பெண்ணின் தந்தை என்று கூறிய ப்ராண்லால் சோனி என்பவர் எழுதிய கடிதத்தின் நம்பகத்தன்மைக் குறித்து கமிஷன் சந்தேகம் தெரிவித்துள்ளது. இத்தகையதொரு வழக்கில் ஏன் தந்தை நேரடியாக கமிஷனை தொடர்புகொண்டார்? என்று நிர்மலா சாமந்த் கேள்வி எழுப்புகிறார். என்னவாயினும் கடிதத்தின் நம்பகத்தன்மையை உறுதிச் செய்ய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் விரிவான விபரங்களை கோரி கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Top