You are here
Home > Uncategorized > கிஷன்ஜி கொலையை கண்டித்து மாவோயிஸ்டுகள் பந்த் துவங்கியது

கிஷன்ஜி கொலையை கண்டித்து மாவோயிஸ்டுகள் பந்த் துவங்கியது

புதுடெல்லி:மாவோயிஸ்டுகள் நாடு முழுவதும் அழைப்பு விடுத்த இரண்டு தின பந்த் துவங்கியது. ஜார்கண்டில் இரண்டு மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ரெயில்வே ட்ராக்குகளை உடைத்தனர்.

சனிக்கிழமை ஜார்கண்ட் சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் நாம்தாரி மீது நடந்த தாக்குதலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.கோமியா, தும்ரி ஆகிய ரெயில் நிலையங்கள் இடையேயான தண்டவாளங்களை மாவோயிஸ்டுகள் தகர்த்ததாக போலீஸ் சூப்பிரண்ட் குல்தீப் திரிவேதி கூறியுள்ளார்.

அண்மையில் சிறப்பு பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜியின் கொலையை கண்டித்து
மாவோயிஸ்டுகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தனர்.

ஜார்கண்டில் லதேஹார் மாவட்டத்தில் வைத்து நாம்தாரி மீது தாக்குதல் நடந்தது. தாக்குதலில் நாம்தாரி உயிர்தப்பினார். ஆனால் 10 போலீஸார் கொல்லப்பட்டனர். காயமடைந்த போலீஸ்காரர் ஒருவர் சிகிட்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். கொல்லப்பட்ட போலீசாரின் துப்பாக்கிகளை மாவோயிஸ்டுகள் பறித்துச் சென்றுள்ளனர். அதேவேளையில், மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பிற்கு ஒரிஸ்ஸாவில் மக்களின் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களிலும் போக்குவரத்து தடைப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மால்கான்கிரி, ராயகடா, கஜபதி, சுந்தர்காட், கண்டமால் மாவட்டங்களில் மக்களின் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Top