You are here
Home > Uncategorized > கிஷன்ஜியின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்: சி.பி.எம்

கிஷன்ஜியின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்: சி.பி.எம்

கொல்கத்தா:மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜியின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்த அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என சி.பி.எம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவரது கொலையை குறித்த சர்ச்சை இதன் மூலமே முடிவுக்கு வரும் என அக்கட்சி கூறியுள்ளது.

அறிக்கையை பகிரங்கப்படுத்துவது மேற்குவங்காள அரசின் கடமை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்(சி.பி.எம்) மாநில செயலாளர் பிமன்போஸ் கூறியுள்ளார்.

’கிஷன்ஜி எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. தேசிய மனித உரிமை கமிஷனின் வழிகாட்டுதல் படிதான் போஸ்ட் மார்ட்டம் நடத்தவேண்டும். ஃபாரன்சிக் நிபுணர்களின் பங்களிப்பு அதில் இருக்கவேண்டும்’ என பிமன் போஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Top