You are here
Home > Uncategorized > கால்நடை தீவன ஊழல்: அன்று முதல் இன்று வரை!

கால்நடை தீவன ஊழல்: அன்று முதல் இன்று வரை!

பீகார்: 1990-களில், பீகார் மாநிலத்தில் போலி ரசீதுகள் தாக்கல் செய்யப்பட்டு ரூ. 37.7 கோடி கால்நடை தீவன ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது.

1996, ஜனவரி – கால்நடை துறையில் சோதனை நடத்தப்பட்டது.

1996, மார்ச், 11 – பாட்னா நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றியது.

1996, மார்ச், 27 – சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

1997, ஜூலை 23 – லாலு குற்றவாளியாக சேர்க்கபட்டார்.

1997, ஜூலை 25 – முதல்வர் பதவியில் இருந்து விலகினார். மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார்.

1997, ஜூலை 30 – லாலு சரணடைந்தார், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

1997, டிசம்பர் 12 – 135 முறை நீதிமன்றக் காவலுக்கு பிறகு ஜாமீன் கிடைத்தது.

2000, ஏப்ரல் 5 – குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

2002, பிப்ரவரி: ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

2013, ஆகஸ்ட் 13: வழக்கை விசாரித்து வரும் நீதிபதியை மாற்ற கோரி லாலு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2013, செப்டம்பர் 17: விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Top