You are here
Home > Uncategorized > கவுரவ கொலைகளுக்கு மரணத்தண்டனை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கவுரவ கொலைகளுக்கு மரணத்தண்டனை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் கெளரவ கொலைகளை அபூர்வங்களில் அபூர்வ பிரிவில் உட்படுத்தி குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை விதிக்கவேண்டுமென நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகரீகமற்ற இத்தகைய குற்றங்களை துடைத்தெறியவேண்டிய காலம் நெருங்கிவிட்டது என நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு,ஞான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்தது. கவுரவக்கொலை வழக்கில் டெல்லி செசன்ஸ் நீதிமன்றம் வழங்கிய ஆயுள்தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த குற்றஞ்சாட்டப்பட்ட பகவன்தாஸின் மனுவை பரிசீலிக்கும்போது பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

பிள்ளைகள் தங்களின் பெற்றோரின் விருப்பங்களுக்கு எதிராக வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டால் அவர்களுடான உறவை முறிப்பதுதான் ஒரேவழியை தவிர சட்டத்தை கையில் எடுக்க எவருக்கும் அதிகாரமில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் நகல்களை இந்தியாவின் அனைத்து உயர்நீதிமன்றங்கள்,செசன்ஸ் நீதிமன்றங்கள்,அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்கள், டி.ஜி.பிக்கள் ஆகியோருக்கு அனுப்பிவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

Top