You are here
Home > Uncategorized > கலவர பூமியில் குடும்பத்தினரை எதிர்பார்த்து தனிமையில் வாடும் ஸைதா!

கலவர பூமியில் குடும்பத்தினரை எதிர்பார்த்து தனிமையில் வாடும் ஸைதா!

முஸாஃபர் நகர்: முஸாஃபர் நகர் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட குதுபா கிராமத்தைச் சார்ந்த ஸைதா, ஜாமிஆ இஸ்லாமிய்யா சந்தேடி மதரஸாவில் தனிமையில் வாடுகிறார்.

எவரிடமும் அவர் பேசுவதில்லை. கணவர் உட்பட குடும்பத்தில் 12 பேரை குறித்து எந்த விபரமும் அவருக்கு கிடைக்கவில்லை. மஹாபஞ்சாயத்து கூட்டத்திற்கு பிறகு வெறி பிடித்த 500 பேரைக் கொண்ட வன்முறைக் கும்பல் இவரது வீட்டை தாக்கியது.

இதன் பின்னால் ஒரு முஹல்லாவை (ஊர்) முழுவதும் தீக்கிரையாக்கும் திட்டம் அடங்கியிருந்தது. கணவரின் தந்தை, தாய், கணவரின் சகோதரி, சகோதரன், குழந்தைகள் உள்பட 12 பேர் காணாமல் போயுள்ளனர்.

நள்ளிரவில் குதுபா கிராமத்திற்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் பெட்ரோல் குண்டுகளை உபயோகித்து வீடுகளுக்கு தீ வைத்தனர். சமையலறை வழியாக வெளியே ஓடியவர்கள் உயிர் தப்பினர்.

இவர்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றார்கள் என்பதை அறிந்த ஜாட் இன வெறியர்கள் கரும்புத் தோட்டங்களில் மறைந்து இருந்து தாக்கினர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். சிலர் கொல்லப்பட்டனர்.

இங்கிருந்து உயிர் தப்பிய ஸைதா, ஜாமிஆ இஸ்லாமிய்யா சந்தேடி மதரஸாவில் அபயம் தேடினார். ஒவ்வொரு கிராமத்தைச் சார்ந்தவர்களின் கதைகளை கேட்கும்போது காணாமல் போனவர்கள் திரும்ப வரமாட்டார்கள் என்று ஸைதாஅஞ்சுகிறார்.

Leave a Reply

Top