You are here
Home > Uncategorized > கலவரம் இல்லாமல் பா.ஜ.கவால் வெற்றிப் பெற முடியாது – திக் விஜய்சிங்!

கலவரம் இல்லாமல் பா.ஜ.கவால் வெற்றிப் பெற முடியாது – திக் விஜய்சிங்!

புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ், தங்களது கேடர்களுக்கு வெடிக்குண்டு தயாரிப்பதுக் குறித்து பயிற்சி அளிப்பதாக மீண்டும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறியது: வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கிறார்கள் என்பது தொடர்பான வீடியோ காட்சிகள் என்னிடம் உள்ளன. 2002-ஆம் ஆண்டு மவ் கோயில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட 6 ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி உறுப்பினர்களில் 4 பேர் கைதுச் செய்யப்பட்டனர். ஆறுபேரும் நடத்திய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் வீடியோஎன்னிடம் உள்ளது. இதனை ஏற்கனவே நான் தெரிவித்துள்ளேன். ஆறு சங்க்பரிவார் உறுப்பினர்களில் சுனில் ஜோஷியும், ராம்ஜி கல்சங்கராவும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
தேவாஸில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்காக இருந்த ஜோஷியை, பின்னர் ஆர்.எஸ்.எஸ் காரர்களே கொன்றனர். ஆர்.எஸ்.எஸ் என் மீது மான நஷ்ட ஈடு வழக்கை தொடர்ந்தது.நான் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தபோது அவர்கள் வழக்கை வாபஸ் பெறும் சூழல் ஏற்பட்டது.காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வகுப்புவாதத்தை கிளறிவிட்டு கலவரம் உருவாக்க ஆர்.எஸ்ஸும், பா.ஜ.கவும் முயற்சிக்கின்றன. கலவரம் இல்லாமல் பா.ஜ.கவால் வெற்றிப் பெற முடியாது.இவ்வாறு திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

Leave a Reply

Top