You are here
Home > Uncategorized > கர்நாடகா: வக்ப் சொத்துகள் ஆக்கிரமிப்பு பிணையில்லா குற்றம்!

கர்நாடகா: வக்ப் சொத்துகள் ஆக்கிரமிப்பு பிணையில்லா குற்றம்!

பெங்களூர்: வக்ப் சொத்துகள் ஆக்கிரமிப்பை கர்நாடக வக்ப் போர்டு பிணையில்லா குற்றமாக அறிவித்துள்ளது.

வக்ப் சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அதனை நாடாளுமன்றம் அங்கீகரித்தது. அந்தச் சட்டத் திருத்தம் கடந்த நவம்பர் 1 முதல் அமுலுக்கு வந்தது.

அதன் படி வக்ப் சொத்துகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது பிணியில்லா குற்றம் சுமத்தப்படும் என்று கர்நாடக வக்ப் போர்டு அறிவித்துள்ளது.

இது குறித்து கர்நாடகா வக்ப் போர்டின் தலைவர் ஆர். அப்துல் ரியாஸ் கான் கூறியதாவது: “இந்தச் சட்டத் திருத்தம் ஆக்கிரமிப்பாளர்களின் வரையறையை விரிவு படுத்தியுள்ளது. தனிப்பட்ட மனிதர் அல்லது நிறுவனம், அந்த நிறுவனம் பொது நிறுவனம் அல்லது தனி நிறுவனம், பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ வக்ப் சொத்தை ஆக்கிரமித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதோடு, வாடகை ஒப்பந்தம் அல்லது லீஸ் ஒப்பந்தம் அல்லது உரிமம் காலாவதியான நபர்கள் அல்லது முத்தவல்லியாலோ, வக்ப் போர்டு தலைவராலோ மேற்கண்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்ட நபர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கருதப்படுவார்கள் என்று அந்தச் சட்டத் திருத்தம் தெளிவாகக் கூறுகிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Top