You are here
Home > Uncategorized > கர்நாடகா:பா.ஜ.க எம்.எல்.ஏ வீட்டில் மூன்று கிலோ தங்கம் பறிமுதல்

கர்நாடகா:பா.ஜ.க எம்.எல்.ஏ வீட்டில் மூன்று கிலோ தங்கம் பறிமுதல்

பெங்களூர்:கர்நாடகாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ எஸ்.விசுவநாதனின் வீட்டை பரிசோதித்த லோக் ஆயுக்தா போலீஸ் மூன்று கிலோ தங்கம் உள்பட கோடிக்கணக்காண ரூபாய் மதிப்புடைய சட்ட விரோதமாக குவிக்கப்பட்ட சொத்துக்களை கண்டுபிடித்தனர்.

இரண்டு கார், நான்கு டிராக்டர், 1.5 லட்சம் ரூபாய் மதிப்புடைய அமெரிக்க டாலர், 1.5 லட்சம் ரூபாய் மற்றும் நான்கு ப்ளாட்டுகள், 65 ஏக்கர் நிலத்தின் உரிமையை நிரூபிக்கும் ஆவணங்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

விசுவநாதன் சட்டவிரோதமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டார் என புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து லோக் ஆயுக்தா போலீஸ் அவரது வீட்டில் சோதனை போட்டது.

Leave a Reply

Top