You are here
Home > Uncategorized > இந்தியா > கடந்த ஒரு வருடத்தில் 25கிராமம் மற்றும் நகரங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஒப்புதல்!

கடந்த ஒரு வருடத்தில் 25கிராமம் மற்றும் நகரங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஒப்புதல்!

கடந்த ஒரு வருடத்தில் மத்திய அரசு 25நகரம் மற்றும் கிராமங்களின் பெயர்களை மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது என்றும் வெஸ்ட் பெங்கால் என்ற பெயரை வெஸ்ட் பங்களா என மாற்றும் திட்டத்துக்கு மட்டும் மத்திய அரசு இதுவரை ஒப்புதலும் வழங்கவில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில்
மத்திய அரசு கடந்த ஒரு ஆண்டுக்குள் நாட்டில் உள்ள 25 நகரங்கள், கிராமங்களின் பெயர்களை மாற்றுவதற்கு அனுமதி வழங்கியது. அதில் குறிப்பாக அலகாபாத் நகரை பிரயாக்ராஜ் என்றும், பைசாபாத் மாவட்டத்தை அயோத்தியா என்றும் மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதில் இதுவரை ஆந்திரா மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரியை ராஜமகேந்திரவரம் என்றும், ஒடிசா மாநிலத்தில், பத்ரக்மாவட்டத்தில் அவுட்டர் வீலர் என்ற தீவை ஏபிஜே அப்துல்கலாம் தீவு என்றும், கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் அரிக்கோடு நகரை அரீகோடி என்றும், ஹரியாணாவில் பிந்தாரி நகரைப் பந்து-பிந்தரா என்றும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும், இதே போல் மகாராஷ்டிராவில் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள லான்ட்கோவாடி நகரை நரசிங்கஹான் என்றும், ஹரியானாவில் ரோடக் மாவட்டத்தில் கார்கி சாம்ப்லா நகரை சர் சோட்டு ராம் நகர் என்றும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம்,உத்தரப்பிரதேசம் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்கள், கிராமங்கள் பெயர்கள் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளன.
எந்தவிதமான நகரங்கள், கிராமங்கள் பெயர்களையும் மாற்ற வேண்டுமானாலும், ரயில்வே துறை, மத்திய அஞ்சல் மற்றும் சர்வே ஆப் இந்தியா ஆகிய துறைகளின் அனுமதி பெற்ற பின்பு தான் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கும் என தெரிவித்தார்.
இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரின் பெயரை கர்னாவதி என்று மாற்றுவதற்கு அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி திட்டமிட்டுள்ளார். இந்தப் பெயரை மாற்றினால் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு நல்ல வாக்குகளைப் பெற்றுத்தரும் என்று அவர் நம்புகிறார். இதேபோல், தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் நகரின் பெயரையும் மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் ராஜா சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Top